இந்துமத கடவுள்கள் மற்றும் அரசியல் தலைவர்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது.
கடந்த 18-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்புப் போராட்டம் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா அவர்கள் இந்து மத கடவுள்கள் குறித்தும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார்.
இந்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் சாதி மத மோதலை தூண்டும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வேண்டும் என புகார்கள் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து, காவல்துறை நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், இன்று ஜார்ஜ் பொன்னையாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டவிரோதமாக கூடுதல், சாதி மதம் மற்றும் இரு தரப்பினரிடையே விரோதங்களை உருவாக்குதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகள் மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் அருமனை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ மத பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை மதுரை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…