ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார் பிரதமர்.
புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் – நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ தூரம் 4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி கட்டிடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.491 கோடி.சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு துறைமுகம் உருவாக்குவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில், தடகள வீரர்களுக்கான சிந்தடிக் ஓடு தளத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். புதுச்சேரி ஜிப்மெர் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். புதுச்சேரி லாஸ்பேட்டையில் 100 படுக்கைகள் கொண்ட மாணவிகள் விடுதியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது தடகள வீராங்கனைகளுக்காக ரூ.12 கோடி செலவில் இந்திய விளயைாட்டு ஆணையத்தால் கட்டப்பட்டுள்ளது. மீண்டும் கட்டப்பட்ட பாரம்பரிய மாரி கட்டிடத்தை அவர் தொடங்கி வைக்கிறார். புதுச்சேரி வரலாற்றின் அடையாளமாக இருந்த மாரி கட்டிடம், பிரெஞ்சுகாரர்களால் கட்டப்பட்டது. தற்போது அதே கட்டிடக் கலையில் ரூ.15 கோடி செலவில் அந்த கட்டிடம் மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025