Minister Udhayanidhi stalin [File Image]
சேலம் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் குட்டிக்கதை ஒன்றை கூறினார். பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது.
சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின் தலையில் தட்டினாய்; நான் பூட்டின் இதயத்தை தொட்டேன் என்று, இதில் பூட்டு என்பது தமிழ்நாடு; சுத்தியல் ஒன்றிய பாஜக அரசு; மக்களின் இதயத்தை தொடும் சாவி திமுக என தெரிவித்தார்.
மேலும், 2021 தேர்தலில் அதிமுக அடிமைகளை வீட்டுக்கு அனுப்பினீர்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக, திமுகவை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை ஏவி வருகிறது.
மக்களுடன் முதல்வர்… சோதனை முறையில் திட்டத்தை தொடங்கியது தமிழக அரசு!
பிரதமர் மோடிக்கு எங்கு சென்றாலும் என்னுடைய ஞாபகமாகத்தான். நேற்று ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக கூறியுள்ளார். நான் 2000 பேர் இருந்த அரங்கில் சமூகநீதி பற்றி பேசினேன். ஆனால் நான் பேசாதவற்றையெல்லாம் பேசி பூதாகரமாக பேசி, ஒட்டுமொத்த இந்தியாவும் என்னை பத்தி தான் பேசுகிறது.
எனவே திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞரின் குடும்பம் தான் வாழும் என கூறுகிறார்கள். நீங்கள் அத்தனை பேருமே கலைஞரின் கொள்கை வாரிசு தான். எனவே திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வாழ்வுபெறும். இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில், இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…