தமிழக காவலருக்கு பிரதமரின் உயிர்காக்கும் விருது அறிவிப்பு…!…!

பட்டுக்கோட்டையை சேர்ந்த காவலர் ராஜ்கண்ணன் என்பவருக்கு பிரதமரின் உயிர்காக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் தென்னமநாடு கிராமத்தை சேர்ந்த 35 வயதான காவலர் ராஜ் கண்ணன் பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இவர் ஆற்றில் விழுந்த ஒருவரை தனது உயிரைப் பொருட்படுத்தாமல் காப்பாற்றினார்.இதனால்,இவருக்கு “பிரதமரின் உயிர்காக்கும் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது.அவரைத் தொடர்ந்து நாடு முழுவதும் மொத்தம் 14 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,காவலர் ராஜ்கண்ணன் இது குறித்து கூறுகையில்,”ஒரு விவசாயி மகனான எனக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது”,என்று கூறினார்.
தஞ்சையில் ஆயுதப்படையில் பணியாற்றிய ராஜ்கண்ணன்,முன்னதாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.தர்மராஜ் அவர்களுக்கு பாதுகாவலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025