உணவகங்களில் புகைபிடிக்கும் கூடத்திற்கு தடை – அரசிதழ் வெளியீடு

smoking room ban

உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு ( Smoking Room ) தடை விதித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைபிடிக்கும் அறை திறக்க தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உணவகங்களில் புகைபிடிக்கும் கூடத்திற்கு தடை விதித்து சட்டம்  இயற்றிய நிலையில், அது அரசிதழில் வெளியாகியுள்ளது.

சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகைக்குழல் கூடம் எங்கும் திறக்கக்கூடாது என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை மீறியிருந்தால் புகைக்குழல் கூடத்தில் உள்ள பொருட்கள் பறிமுதல் செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது.

மேலும், விதிகளை மீறி புகைக்குழல் கூடம் திறந்தால் ஓராண்டு முதல் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவுக்கூடங்கள் உட்பட எந்த இடத்திலும் புகைபிடிக்கும் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 Smoking Room
[Image Source : Twitter/@Nandhini_Twits]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்