குற்றமற்றவர் டொனால்ட் டிரம்ப்.! அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 28இல்.! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Donald Trump

கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க அவர் முயற்சிக்காகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தேர்தல் அதிகாரிகளுக்கு இடையூறு கொடுத்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் மீதான விசாரணை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக டிரம்ப்புக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நேற்று அவர் வாஷிங்டன் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னர் ஆஜர் ஆனார். அரை மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதற்குப் பிறகு அவர் மீது தொடரப்பட்ட நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றமற்றவர் என்றும் வாஷிங்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இதனை அடுத்து, அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் எனவும் அதுவரையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாரையும் நேரில் சந்தித்து பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் வாஷிங்டன் நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவிட்டு உள்ளது.

தனக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இம்மாதிரியான பழிவாங்கல் நடவடிக்கைகள் அமெரிக்காவில் ஒருபோதும் நிறைவேறாது என டிரம்ப் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்