து அருந்தும் கூடங்களை (BAR) மூடவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மதுக் கடைகளையும் மூடவேண்டும் என்பதற்கான அடித்தளமாக அமையட்டும் என திருமாவளவன் ட்வீட்.
பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்றும்,டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி,மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியகவோ,மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதியில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடை அருகேயுள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும்,டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வழக்கை தள்ளுபடி செய்து,தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவிற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மது அருந்தும் கூடங்களை (BAR) மூடவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மதுக் கடைகளையும் மூடவேண்டும் என்பதற்கான அடித்தளமாக அமையட்டும். தீர்ப்பளித்த நீதிபதிக்கு எமது பாராட்டுகள். மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…