10,11 மற்றும் 12ம் வகுப்பு நடைபெறும் பொதுத்தேர்வு பாடவாரியாக எந்தந்த தேதியில் நடைபெறும் என்ற குழு அட்டவணையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, மே 5 முதல் மே 28 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும், செய்முறை தேர்வுகள்- ஏப்ரல் 25 – மே 2 வரை நடைபெறும் என அறிவித்தார்.
மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகும். மே 9 முதல் மே 31 ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூலை 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தார்.
இந்நிலையில், 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு பாடவாரியாக எந்தந்த தேதியில் நடைபெறும் என்ற முழு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…