அதிக மக்கள் வாழும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அதிக மக்கள் வாழும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள்ம், சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பெரிய காய்கறி மார்க்கெட் சந்தைகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்திட, பெரிய இடங்கள் அல்லது மைதானங்களில் அவை அமைக்க வேண்டும் என்றும் மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும் குறிப்பிட்டார். இதையடுத்து மளிகை, மருந்து கடைகளிலும் சமூக விலகலை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். ஒலிப்பெருக்கி, தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், துண்டு பிரசுரங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முதலவர் உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025