செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பஞ்சாபை சேர்ந்த 20 வயதுடடைய மாணவி ஆயிஷா ராணா என்பவர் விடுதியில் தங்கி பயோடெக் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் தங்கியிருந்த விடுதி தனி அறையில் துப்பட்டாவால் கழுத்தில் தூக்கிட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனிடையே நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தின் பேரில் கல்லூரி நிர்வாகம் கதவை உடைத்து பார்த்தபோது இது தெரியவந்தது. பின்னர் கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து மாணவியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்று சென்னை ஐஐடியில் பயின்று வந்த கேரளா மாணவி பாத்திமா அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…