நாமக்கல்லில் கொள்முதல் முட்டையின் விலை 5 காசுகள் உயர்வு!

நாமக்கல்லில் கொள்முதல் முட்டையின் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.40ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தீவிர பரவலால் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது. கொரோனா வைரஸ் குறித்து புதிய, புதிய தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்த வதந்தியான செய்திகளும் அதிகமாக பரவ தொடங்கியது.
அந்த வகையில், கோழி முட்டை மற்றும் கோழி கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக தகவல்கள் வெளியானது. இதனால், அச்சமயத்தில், கோழி முட்டையின் விலை கடும் சரிவை சந்தித்தது. அதன் பின் சில வாரங்களில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், முட்டையின் விலை படிப்படியாக உயர தொடங்கியது.
இந்நிலையில், தற்போது நாமக்கல்லில் கொள்முதல் முட்டையின் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.40ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாமக்கல்லில் முட்டையின் விலை ரூ.3.40 ஆகவும், சென்னையில் ரூ.4.20 ஆகவும் விற்பனை முட்டை விற்பனை செய்யப்படுகிறது.