மனம் உவந்து மதுக்கடைகளை தமிழக அரசு திறக்கவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து…

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கடையகளும் அடைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை மறுநாள் மதுக்கடைகள் அனைத்தும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்ததற்கு க பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து மீம்ஸ்களும் வைரலாகிவரும் நிலையில் தமிழக கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த கடை திறப்பு குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் முடிவு என்பது மனம் உவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், பொருளாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காகவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுப்பதற்காகவும்தான் தற்போது மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025