சிங்கப்பூரில் வேலை பார்க்கும் 4800 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று…

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது. தற்போது வரை சிங்கப்பூரில் 18,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை 18 பேர் மட்டுமே இந்த தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் சிங்கப்பூரில் இறப்பு எண்ணிக்கை 0.1 சதவீதம் என்ற அளவிலேயே கட்டுக்குள் உள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,000 நெருங்கி வரும் நிலையில் அங்கு வேலைக்கு சென்றுள்ள இந்தியர்கள் 25 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் மிகவும் நெரிசலான இடங்களில் தங்கியுள்ளனர். தற்போது வரை 4800 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். என்றாலும் அங்கு நோயின் தாக்கம் குறைவாகவே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025