ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.
அதிமுக வேட்பாளர் இன்பதுரை 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவுக்கு எதிராக அதிமுகவின் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வருகின்ற 11-ஆம் தேதி வரை வெளியிட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிசம்பர் 11ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அப்பாவு, இன்பதுரை தரப்பு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…