வாக்காளர்களை கவருவதற்காக ராகுல் காந்தி கோமாளி போல செயல்படுகிறார் என சி.டி.ரவி விமர்சித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், உதகையில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு வரவேற்பு உள்ளது. அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் கலாச்சாரத்தை பாஜக தான் பாதுகாக்கிறது. அதிமுக ஜனநாயகம் கொண்ட கட்சி, ஆனால் திமுகவில் ஜனநாயகம் இல்லை. குடும்ப அரசியலை செய்து வருகின்றனர். பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், வாக்காளர்களை கவருவதற்காக ராகுல் காந்தி கோமாளி போல செயல்படுகிறார் என்றும் ராகுல்காந்தியை விமர்சித்துள்ளார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…