ராகுல் காந்தி மனு தள்ளுபடி! போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சினர் கைது!

Arrest

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது.

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று விருத்தாசலத்தில் போராட்டம் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்போது பேசிய கேஎஸ் அழகிரி, பின் வாசல் வழியாக ராகுல்காந்தியை முடக்க மோடி அரசு முயற்சி செய்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுவதை தடுக்க பாஜக முயற்சி செய்கிறது. ராகுல் காந்தி தான் மக்கள் மன்றத்தில் வெற்றி பெறுவார். நரேந்திர மோடி உண்மையான அரசியல் தலைவராக இருந்தால் தேர்தல் களத்தில் மோதுங்கள் எனவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்