சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவரும் பணிகள் இன்றுடன் நிறுத்தம்

வேலூர் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவரும் பணிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்பட்டு உள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ .65 கோடி நிதி ஒதுக்கியது.ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரயில் நிலையத்திற்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு அங்கு 50 வேகன்கள் கொண்ட ரயில் மூலமாக சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
தற்போது சென்னை ஏரிகளில் உள்ள நீர் இருப்பு மேலும் அதிகரித்து வரும் நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவரும் பணிகள் இன்றுடன் நிறுத்தப்படுகிறது .ரயில் மூலம் இதுவரை 39.25 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025