ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா.! தஞ்சை பெரிய கோவிலில் கோலாகல கொண்டாட்டம்.!

Published by
மணிகண்டன்

இன்று தஞ்சை பெரிய கோவிலில் 1038வது சதய விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன், தான் சோழ தேசத்து மன்னனாக முடிசூட்டிக்கொண்ட ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில் இந்த சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே போல ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் தான் ராஜ ராஜ சோழன் பிறந்தார் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கி.பி.985ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் முடிசூட்டிக்கொண்ட அருண்மொழி வர்மன் எனும் ராஜ ராஜ சோழன் பதவி ஏற்று இந்த வருடத்தோடு 1038 ஆண்டுகள் ஆகிறது.  இதனை குறிப்பிட்டு தான் இன்று சதய விழா நடைபெறுகிறது.

ஐகோர்ட் உத்தரவு… தேவரின் தங்கக் கவசத்தை பெற்றார் திண்டுக்கல் சீனிவாசன்!

இந்த சதய விழாவானது நேற்று முதலே தொடங்கியது. நேற்று தஞ்சை பெருவுடையார் கோவிலில் மங்கள வாத்தியம் இசைக்க, 1038 பாரத கலைஞர்கள் நடனமாட, கருத்தரங்கம் சிறப்பு பூஜைகள் என வெகு விமரிசையாக தொடங்கியது.

அதனை தொடர்ந்து, இன்று (அக்டோபர் 25) ராஜ ராஜ சோழன் மீட்ட பன்னிரு திமுறைக்கு சிறப்பு ஆராதனை அளிக்கப்பட்டது. அப்போது பன்னிரு திருமுறைகளை ஓதுவார்கள் பாடினார்கள்.இதனை தொடர்ந்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் – ஜேக்கப் , ராஜ ராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்றைய சதய விழாவில் ராஜ ராஜ சோழனுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தும் நிகழ்வில்,  சதய விழா குழு தலைவர்  செல்வம், ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்தம் பரமாச்சர்ய சுவாமிகள் என பலர் கலந்துகொண்டனர். இன்று 1038வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று (அக்டோபர் 25) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

28 minutes ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

2 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

2 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

3 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

4 hours ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

5 hours ago