நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!
நடிகர் கவுண்டமணி மனைவிக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு செல்வி, சுமித்ரா என்ற இரு மகள்கள் உள்ளனர். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது.
இதனையடுத்து, தேனாம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தற்போது, கவுண்டமணி மனைவி சாந்தியின் உடலுக்கு விஜய் நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கவுண்டமணியை ஆரத்தழுவி விஜய் ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025