SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!
இன்றைய டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இப்பொது முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்ய போகிறது .
இந்த சீசனை சிறப்பாக தொடங்கிய டெல்லி கேபிடல்ஸ், தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 10 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், எஞ்சிய 4 போட்டிகளிலும் அதிக ரன் ரேட்டுடன் வென்றால் மட்டுமே ஹைதராபாத் அணியால் பிளே ஆஃப் செல்ல முடியும்.
அதனால், இன்றைய போட்டியில் அனல் பறக்கும். இந்த சீசனில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது,
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சச்சின் பேபி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், , ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், ஜீஷன் அன்சாரி, ஈஷான் மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ்:
கேப்டன் அக்சர் படேல் தலைமையிலான அணியில், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், டி நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.