ரஜினி, அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் ஆதரவு -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரஜினிகாந்த் மற்றும் அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் ஆதரவளிப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் மரணம் என்பது வருத்தப்பட கூடிய நிகழ்வு, விதிகள் மீறி பேனர் வைப்பவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.
மேலும் ரஜினிகாந்த் மற்றும் அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் ஆதரவளிப்போம் என்று கூறிய அவர் நடிகர் விஜய் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025