#BreakingNews : ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் ! ஒருவாரத்திற்கு ஓய்வு அவசியம் – மருத்துவமனை நிர்வாகம்

இன்று ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு 3 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.ஆகவே ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்நிலையில் ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்த மாறுபாடு சீராகி உடல்நிலை தேறியுள்ளது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, இன்று ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,ஒரு வாரத்திற்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும். இரத்த அழுத்தத்தை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். உடல் உழைப்பை குறைத்துக் கொள்ளவேண்டும். மன அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று ஏற்படும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025