தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் என்று கருணாஸ் MLA தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் கூட்டணி குறித்து, திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய கருணாஸ், எங்கள் கட்சி எந்த அமைப்பிற்கும் ஜாதிக்கும் எதிரானவர்கள் அல்ல, அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது.
பாமக 20% இட ஒதுக்கீடு கேட்பது என்பது பிற சமூகத்தினரை வஞ்சிக்கும் செயல். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம். தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார். அதிமுகவிடம் இரண்டு தொகுதிகள் கேட்க உள்ளோம் என்றார். இதனிடையே, தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அதில் வெற்றி பெற்ற எம்எல்ஏவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…