திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ,சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களில் ஆற்றுமணலுக்கான மதிப்பீடு கொடுத்துவிட்டு, M-Sand பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தை ‘ஊழல் நிர்வாகமாக’ மாற்றியுள்ள அமைச்சரும் அதிகாரிகளும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் வேலுமணி கூறுகையில்,சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் முறையாக ஆன்லைன் மூலம் கோரப்படுகிறது.உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக அதிமுக அரசை குற்றம் சாட்டிவருகிறார்.
அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் எந்த அளவுக்கு தன்னை தரம் தாழ்த்திக்கொள்கிறார் என்பதை இதன் மூலம் மக்கள் புரிந்து கொள்ள முடியும்.ஒரு பொய்யை நூறு தடவை சொன்னால் பொய் உண்மையாகும் என்ற ‘கோயப்பல்ஸ்’ தத்துவத்தின் அடிப்படையில் ஸ்டாலின் செயல்படுகிறார். ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் இன்றே என் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…