#BREAKING: சசிகலாவை நீக்கியது செல்லும் – ஓ.பன்னீர் செல்வம்..!

Published by
murugan

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

அதிமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் முன்மொழியப்பட்டும், வழிமொழியப்பட்டும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவி வகித்த சசிகலாவை நீக்கியது.  இந்நிலையில், தன்னை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்டு இந்த வழக்கை உரிமையியல் நிராகரித்த நிலையில், இதனை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தற்போது நீதிபதி சுப்பிரமணியன், செந்தில் குமார் அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையில் ஒன்றை தலைமை பிரச்சனையால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு அணிகளாக பிளவுபட்டது. கடந்த ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

10 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

11 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

12 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

13 hours ago