கொரோனா நோயாளிகளை தாக்கக்கூடிய கருப்பு பூஞ்சை தொற்று நோயால் மதுரையில் இதுவரை 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனராம்.
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கொரோனாவில் இருந்து மிகவும் கடினப்பட்டு மீண்டு வருபவர்களுக்கு தற்பொழுது மிகப்பெரும் சவாலாக கருப்பு பூஞ்சை நோய் தற்போது பரவி வருகிறது. இதன் மூலம் கண், காது, மூக்கு, தாடை பகுதியில் வீக்கம் ஏற்பட்டு பல் வலி தலைவலி மற்றும் மூக்கில் இரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த கருப்பு பூஞ்சை வந்தது.
தற்போது இந்த நோய் தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சையின் பாதிப்பு தற்பொழுது மிக அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த வகையில் மதுரையில் கொரோனாவில் இருந்து மீண்ட 20 பேருக்கு தற்பொழுது கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலர் குணம் அடைந்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…