சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சீலிட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற கிளை.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் பின்னர் சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.எனவே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள், சிசிடிவி காட்சிகள், உள்ளிட்டவையை சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி ஒப்படைத்தது.இதனால் இந்த வழக்கைகொலை வழக்காக மாற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் ,சீலிட்ட கவரில் சிபிசிஐடி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சிபிஐ சார்பில் அறிக்கை ஏதும் தாக்கல் செய்யவில்லை. எனவே சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரித்து வரும் 8 அதிகாரிகளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வழக்கில் சீலிட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற கிளை.ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில் இந்த வழக்கில் தங்களையும் ஒரு எதிர்மனுதாராக சேர்க்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.பின் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…