மழைநீரை சேமிப்போம்..! நமக்காக …! நாட்டுக்காக …!நாளைக்காக -எஸ்.பி. வேலுமணி!

Default Image

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது.இதனால் சமீபத்தில் ஹோட்டல்,தனியார் நிறுவனர்கள் மூடியதாக தகவல் வெளியானது.இதை தொடர்ந்து சென்னைக்கு உடனடியாக தமிழக அரசு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக தண்ணீர் வழங்கி வருகிறது.

தண்ணீர் பிரச்சனை இனிமேல் ஏற்படப்படாமல் இருக்க அனைவரும் தங்கள் வீட்டில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் அதிமுக மந்திரி எஸ்.பி. வேலுமணி மழை நீரை சேகரிப்புவிழிப்புணர்வு குறித்து தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறுகையில்”இறைவன் கொடுத்த கொடை மழை அந்த மலை நீரை சேகரிப்பது என்பது மிக அவசியம் மாண்புமிகு அம்மா அரசை வழிநடத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மழைநீர் சேகரிப்பை பற்றி கூறி இருந்தார்.

200 சதுர அடி கொண்ட வீட்டில் முறையாக மழைநீரை சேகரித்து வந்தால் ஒரு குடும்பம் ஒரு வருடத்திற்கு தேவையான நீரை சேகரிக்கலாம்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அவர்கள் வீட்டில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இனி பொய்யும் மழையில் இருந்து ஒரு சொட்டு மழை நீரையும் வீணாக்கக்கூடாது.இதை நாம் ஒரு சவாலாக எடுத்து செயல்படுத்துவோம்.மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவரும் ,மக்கள் மேல் அக்கறை உள்ளவர்களும் ,தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் மழை நீர் சேகரிப்பை பற்றி உணர்த்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.மழைநீரை சேமிப்போம்..! நமக்காக …! நாட்டுக்காக …!நாளைக்காக …!என கூறி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்