தமிழக சட்டப்பேரவையில் வரும் 14ம் தேதி வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று முதலமைச்சர் அறிவிப்பு.
சென்னை தரமணி எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய்கள் குறித்து சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விஞ்ஞானி செளமியா, சுவாமிநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்தபின் பேசிய முதல்வர், பசிப்பிணி ஒழிப்பை இலக்காக கொண்டு எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. எம்.எஸ் சுவாமிநாதனின் ஆலோசனைகளை செயல்படுத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழ் பண்பாட்டையும், தமிழ் இனத்தையும் மதிக்கும் அரசாகத்தான் திமுக எப்போதுமே இருக்கும்.
வரும் 13ம் தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தாண்டு வரலாற்றிலேயே முதன்முறையாக வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளோம். தமிழக சட்டப்பேரவையில் வரும் 14ம் தேதி வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என அறிவித்தார்.
வேளாண்மைதான் நாட்டுக்கு உயிராகவும், உடலாகவும் உள்ளது. அதற்கு சிறப்பு கவனத்தை செலுத்தி வருகிறோம். விவசாயித்துக்கு தனி நிதிநிலை அறிக்கை, இயற்கை வேளாண்மைக்கு தனி கவனம், உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்தல், கிராம சந்தை அமைப்பதற்கான நடவடிக்கை, நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய திட்டம், சென்னை பெருநகரத்தை வெள்ள நீர் சூழாமல் இருக்க, பெருநகர வெள்ளநீர் மேலாண்மை குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இந்த அமைச்சரவையில் பதவிகளின் பெயர்கள் மாற்றப்பட்டள்ளது. நீர்வளத்தை பாதுகாப்பதற்காக நீர்வளத்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண் துறை என்பதை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை என மாற்றப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கு திமுக தலைமையிலான அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இயற்கையை சீர்குலைத்து விடாமல் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனவும் முதலமைச்சர் உரையாற்றினார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…