செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +1, +2 மாணவிகளுக்கு நாகராஜ், புகழேந்தி ஆகிய இருவரும் ஆசிரியராக பணியாற்றி வந்து உள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் , ஆபாச படங்களை செல்போன் மூலம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி மாணவிகளின் பெற்றோர்கள் செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் இருவரும் கைது கைது செய்யப்பட்டார்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்றும் உள்நோக்கத்தோடு புகார்கள் எழுந்ததாக கூறி அவர்களை விடுதலை செய்தது.இந்த விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மாணவியின் பெற்றோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த வாரம் நீதிபதி வேல்முருகன் செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார். இவருக்கான தண்டனை விபரங்கள் பிப்ரவரி 25-ம் தேதி அறிவிக்கப்படும் என கூறினார். மேலும் அன்று இருவரையும் காவல்துறை ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று நீதிபதி வேல்முருகன் ஆசிரியர்களுக்கான தண்டனையை கூறினார்.அதில் நாகராஜூக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ,புகழேந்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆசிரியர் நாகராஜ் நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…