மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, ராஜகோபாலனை ஜூன் 8-ம் தேதி வரை, 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபால். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இணையத்தில் புகார்கள் எழுந்து வந்தது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஆசிரியர் ராஜகோபால் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மகளிர் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல்துறையினர் நேற்று மாலை 4 மணியிலிருந்து ராஜகோபாலன் இடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ராஜகோபாலன் பல முக்கியமான தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். அவர் பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, ராஜகோபாலனை ஜூன் 8ம் தேதி வரை, 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…