தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ மையம்! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க சுத்த மருத்துவ மையம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ‘கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையம்’ தொடங்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை சித்த மருத்துவத்தால் 75,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸில் இருந்து, குணமடைந்துள்ள நிலையில், இதில் முதல் நிலை அறிகுறி உள்ளவர்களுக்கு உணவே மருந்து, மருந்தே உணவு என்ற முறையில் அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டு, அதன்மூலம் நோயை குணப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.