ஹர்திக் பாண்டியாவின் அழகிய குழந்தையை பார்த்தீர்களா..?

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது குழந்தையை கையில் வைத்தியிருக்கும் புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த நட்சத்திர வீரராக உருவாகி வருபவர் ஹர்திக் பாண்டியா இவர் கடந்த 2013 -2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சயது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் அந்த அணி வெற்றி பெறுவதில் ஹர்திக் பாண்டியா முக்கியப் பங்காற் றினார். மேலும் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
மேலும் உலக கோப்பைக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை கடைசியாக அவர் பெங்களூருவில் நடந்த தென்னாப் பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் தான் கடைசியாக விளையாடினர்.
இந்த நிலையில் இவர் செர்பியாவை சேர்ந்த நடிகையான நடாஷா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக திடீரென சில புதிய புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு செய்தார்.
தற்பொழுது ஊரடங்கு காரணமாக எளிய முறையில் இவர்களது திருமணம் நடந்ததாகவும் தனது மனைவி நடாஷா கர்ப்பமாக இருப்பதையும் கடந்த 2 மாதங்களுக்கு முன் உறுதி செய்தார்.
இந்த நிலையில் நேற்று கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது மேலும் தற்பொழுது தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
The blessing from God ????????❤️ pic.twitter.com/xqcmbVIUIr
— hardik pandya (@hardikpandya7) August 1, 2020