விடியலுக்கான முழக்கம் பொதுக் கூட்டத்தை கட்சி கொடியேற்றி தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!

Published by
பாலா கலியமூர்த்தி

விடியலுக்கான முழக்கம் என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கட்சிக் கொடியை ஏற்றினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திருச்சியில் திமுகவின் விடியலுக்கான முழக்கம் பொதுக் கூட்டம் இன்று நடைபெறும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த பொதுக் கூட்டத்திற்கான பிரமாண்டமாக சுமார் 750 ஏக்கரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதில், மூன்று மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றவும் நடந்து சென்று தொண்டர்களிடம் பேசவும் நீண்ட நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.மற்ற இரு மேடைகளில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அமரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் விடியலுக்கான முழக்கம் என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் தொடக்க நிகழ்ச்சியாக 90 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியேற்றி சிறப்பு பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார் முக ஸ்டாலின். இந்த கொடியேற்ற தொடக்க விழாவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இன்று மாலையில் 5 மணிக்கு பொதுக்கூட்டத்தில்  ‘விடியலுக்கான முழக்கம்’ உறுதிமொழிகள் குறித்தும் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

3 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

6 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

7 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

8 hours ago