சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனையத்தில் பிரான்சில் இருந்து ஒமென் வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற முகமது ஹாரூன் மரைக்கார் சென்னை வந்தார். அப்போது அவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் அவரது உடைகளை சோதனை செய்தனர். அதில் அவர், ஆடைக்குள் 1 தங்க சங்கிலி, 2 தங்க கட்டிகள், 70 தங்க காசுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் மூலம் அவரிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்புள்ள 990 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்படு குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தாய்லாந்தில் இருந்து வந்த சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அமந்தீப் சிங்(26) என்பவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில்,, அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், அவர் வைத்திருந்த ஆடியோ பிளையரை சந்தேகத்தின்பேரில் பிரித்து பார்த்தபோது அதில் வெள்ளி முலாம் பூசப்பட்ட 32 தகடுகள் இருந்தன. அவற்றை சோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்க தகடுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள 259 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம்இந்த கடத்தல் தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள், முகமது ஹாரூன் மரைக்காரை கைது செய்தனர். அமந்தீப் சிங்கிடம் விசாரித்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…