பல்வேறு திருட்டில் ஈடுபட்ட பலே திருடனை தனிப்படை அமைத்து பிடித்த வட சென்னை எம்.கே.பி நகர் காவல்துறை….

Published by
Kaliraj

சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு மருந்து கடை ஒன்றில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது, பல்வேறு இடங்களில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை செய்ததாக காவல்துறையினரின் விசாரணையில் லொட்டை மதன் என்ற திருடன் ஒப்புக்கொண்டுள்ளான். வடசென்னையின் பிரதான  பகுதிகளான புளியந்தோப்பு, எம்.கே.பி நகர், ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பது போன்ற தொடர் திருட்டு சம்பவங்கள்  நடைபெற்று வந்தவன்னம் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எம்.கே.பி நகர் காவல் உதவி ஆணையர் திரு. ஹரிகுமார் அவர்கள், தனிப்படை ஒன்றை அமைத்து குற்றம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை வைத்து அந்த குற்றவாளியை தேடி வந்தனர்.

ஒரே வாரத்தில் 6 இடங்களில் தொடர் ...

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேடுதல் வேட்டையில், சென்னை ஓட்டேரி  சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த மதன் என்கிற லொட்டை மதனை (19) தனிப்படை காவல்துறையினர்  கையும் களவுமாக பிடித்தனர். காவலர்கள் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னையில்,  பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி, எம்கேபி நக,ர் வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனது திருட்டை அரங்கேற்றியுள்ளதாக ஒப்புக்கொண்டார். இந்த திருட்டுகளை தனியாகவும் தன், நண்பர்களோடும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் தாக்கியும் செல்போன் மற்றும் பணத்தை பறித்து வந்ததது தெரிய வந்தது. அதேபோல சென்னை வியாசர்பாடியில் உள்ள மருந்து கடை ஒன்றின்  பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை அவர்  செய்ததாக விசாரணையில் லொட்டை மதன் ஒப்புக்கொண்டார்.

மேலும், இவர் மீது வட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் ஒன்பதுக்கும் மேற்பட்ட கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இவரிடமிருந்து உயர் ரக திருட்டு இருசக்கர வாகனம், மூன்று கத்திகள், பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் ரொக்கப்பணம் 7 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.மேலும் இவருக்கு திருட்டில் உதவிய லொட்டை மதனின்  நண்பரான இட்டா விஜய் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

8 minutes ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

39 minutes ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

1 hour ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

1 hour ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

2 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

2 hours ago