தமிழக சட்டப்பேரவை : தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த சபாநாயகர்

- இந்தாண்டின் முதல் தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் புத்தாண்டை அடுத்து கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கியது.
- நேற்றுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்தது.
தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில் ,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து 6-ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார். கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.இதனையடுத்து ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கியது.முதல் நாளான அன்று (ஜனவரி 6) ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார்.இதனால் சட்டப்பேரவை கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி கொறடா துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆய்வுக்குழுவில் ஆலோசனை நடத்தி வரும் 9ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று வரை இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்ட தொடர் நடைபெற்றது.இறுதியாக தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025