இலங்கை அகதிகள் முகாம் -இனி “இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்” என பெயர் மாற்றம்;அரசாணை வெளியீடு…!

இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு முக்கிய திட்டங்களை நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து,நேற்று நடைபெற்ற சட்டப் பேரவை விவாதத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள், மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும்,இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது:
“தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழருக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும்.மேலும்,இலங்கை தமிழர் ஆதரவற்றவர்கள் அல்ல.மாறாக,அவர்களுக்கு நாம் இருப்போம்.அவர்கள் நலனில் அரசு உறுதுணையாக இருக்கும்”,என்று தெரிவித்தார்.
இந்நிலையில்,தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம் என்பதை “இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ” என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த உத்தரவை,ஆளுநரின் ஆணைப்படி தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025