மக்களவை மற்றும் இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்ர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார்.கடந்த சில நாட்களாக அவரது அரசியல் செயல்பாடு அதிகமாகவே இருந்து வந்தது. திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார் . திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.37 ஆண்டுகாலமாக மு.க.ஸ்டாலின் வகித்த பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் ,திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழகத்திற்காக அல்ல மகன் உதயநிதியை அதிகாரத்திற்கு கொண்டுவரத்தான். எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல் அடுத்தடுத்து போராடுகிறது எதிர்கட்சியாக உள்ள திமுக. பொதுநலத்தை மறந்து சுயநலமாக செயல்படுவதால் மக்கள் ஸ்டாலினுக்கு தோல்வியை தருவார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…