விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் இந்த தினத்தில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கம் ஆகும்.இதன் பின்னர் சிலையை கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்படுவது வழக்கமாகும்.இந்த நிலையில் இந்த ஆண்டு வருகிற 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
எனவே தமிழகத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதிலும் குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, அலங்கார ஒப்பனைகள் செய்யும் பணிகளில் ஆண், பெண் தொழிலாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…