புயல் பாதிப்பு – கொளத்தூர் பகுதியில் ஸ்டாலின் நிவாரணம்..!
புயலால் அதிகம் பாதிப்படைந்த சென்னை கொளத்தூர் பகுதியில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புரவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து சென்னையின் பல்வேறு பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததுடன் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கடந்த சில தினங்களாக ஆய்வு செய்து, அதிகம் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இன்றும் சென்னை கொளத்தூர் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார்.