உருவானது புயல்… 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்று உள்ளது. ஹாமூன் என பெயரிடப்பட்ட இந்த புயலானது தற்போது வடகிழக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக ஓடிசா வங்கதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்ட மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்தப் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை அருகே தடம் புரண்ட ரயில் பெட்டிகள்… வந்தே பாரத் உட்பட பல ரயில் சேவைகள் பாதிப்பு.!
ஏற்கனவே புயல் உருவாவதற்கான அறிகுறி இருப்பதாக கூறி 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது புயல் உருவானதை குறிப்பிடும் வகையில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மொத்தம் 11 புயல் எச்சரிக்கை கூண்டுகள் வரை மழை, புயலின் அளவை பொறுத்து ஏற்றப்படும்.
இந்த ஹாமூன் புயலானது மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை பகுதியில் நகர்ந்து வருவதால் அம்மாநிலத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இதனால் கனமழையை எதிர்கொள்ள அம்மாநில அரசுகள் தயாராகி வருகின்றன.
அதேபோல் வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
February 17, 2025
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!
February 17, 2025
வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
February 17, 2025
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் – மூன்றாவது விமானம் இந்தியா வந்தடைந்தது.!
February 17, 2025
ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் அட்டவணை இதோ!
February 17, 2025