மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், தமிழகத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சிறப்பு ரயில்கள் இயங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.மேலும் அவரது கடிதத்தில், புறநகர் ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தி ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அக்டோபர் 2-ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது.சென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்குமாறு தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும்.பொதுமக்களுக்கும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் புறநகர் ரயில் சேவை உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கிநடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, ஆளுநர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில்…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இந்த…
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…
அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…