தனியார் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.! பதற்றமடைந்த பயணிகள்.!

Default Image
  • சேலத்தில் சுமார் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்தனர்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேம்படிதாளம் வழியாக இளம்பிள்ளை பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இப்பேருந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தின் என்ஜினிலிருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதையடுத்து பேருந்தில் இருக்கும் பயணிகளை விரைவாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் பேருந்தில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து பரவியது. முன்னெச்சரிக்கையாக பேருந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றியதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் பேருந்தின் என்ஜினில் எலக்ட்ரிக் ஷாக் ஏற்பட்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்