டாஸ்மாக் விவகாரம்: ”அமலாக்கத்துறை எல்லா எல்லைகளையும் தாண்டியுள்ளது” – உச்சநீதிமன்றம்.!

டாஸ்மாக் ரெய்டு விவகாரம், அமலாக்கத்துறை புலன் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து, விசாரணை கோடை விடுமுறை முடிந்து நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

tasmac - sh

சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின் நிலையை விவரிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சோதனைக்கு பிறகு, தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த சோதனைகளை “சட்டவிரோதமானவை” எனவும், மாநில அரசின் அனுமதியின்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது எனவும் வாதிட்டன. இதை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனுவை கடந்த ஏப்ரல் 23 அன்று தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறையின் விசாரணை தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கைகள் (FIRs) அடிப்படையில் நடைபெற்றதாகவும், முறைகேடு குறித்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்றைய தினம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்பொழுது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், அமலாக்கத் துறை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதாவது, டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளதாக தமிழக அரசு கூறிய நிலையில், தனி நபர்களின் தவறுக்கு ஒரு நிறுவனம் மீது எப்படி வழக்கு பதிய முடியும் என கேள்வி எழுப்பி, அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அமலாக்கத் துறை வரம்பு மீறி செயல்படுகிறது.இது கூட்டாட்சி அமைப்பையே சிதைக்கும் விதத்தில் உள்ளது. தனிநபர் விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தது? FIR பதிவு செய்யப்பட்ட பிறகு அமலாக்கத் துறைக்கு அங்கு என்ன வேலை? என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்