மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார்.
பின்னர்,இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூறிகையில் : “மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.அமைச்சர் அவர் மிக நன்றாக பழகினார்.நாங்கள் கொண்டு சென்ற பிரச்னையை மிக தெளிவாக ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறார்.அதுதான் ஆச்சரியமாக உள்ளது.
இதனையடுத்து,உச்சநீதிமன்றமானது,ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால்,இதுவரை நமக்கு கிடைக்க வேண்டிய 50 டிஎம்சி அளவு தண்ணீரில் 8 டிஎம்சி அளவுகூட கிடைக்கவில்லை. எனவே,அதனை உடனே தரவேண்டி கர்நாடக அரசுக்கு அமைச்சர் அவர்கள் உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டோம்.உடனடியாக தான் பேசுவதாக அவர் உறுதியளித்தார்.
அதன்பின்னர்,தமிழகத்திடம் அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு ,மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.இது மத்திய அரசை பொறுத்தவரை சரியான அணுகுமுறை அல்ல என்று தெரிவித்தோம்.அதற்கு அவர்,”எந்த பிரச்சனை ஆனாலும் தமிழக அரசை கேட்காமல் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.இரு மாநில அரசையும் கலந்து ஆலோசனை மேற்கொள்வோம்”.என்று தெரிவித்தார்.
மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் ஆலோசனை மேற்கொள்ளாமல், மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.பிறகு,இது தொடர்பாக ‘நடுவர் மன்றம்’ அமைக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால்,இதுவரை மன்றம் அமைக்கப்படவில்லை.இதற்கு என்ன தீர்வு? என்று கேட்டோம்.
இதனால்,நடுவர் மன்றம் உடனடியாக அமைக்க உத்தரவிடுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் ஆணையத்திற்கு நிரந்தர சேர்மன் அமைக்க வேண்டும் என்றும்,தற்போதைய சேர்மன் எங்களது குறைகளை நிராகரிப்பதாகவும் முறையிட்டோம்,உடனடியாக அவரை நீக்குவதாக கூறினார்.
பின்னர்,முல்லை-பெரியார் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசினோம்.தமிழக அரசின் பிரச்சனைகள் குறித்து நன்றாக தெரிந்து வைத்துள்ளார்.எனவே,அமைச்சருடனான பேச்சுவார்த்தை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.”என்றார்.
இதனையடுத்து,தமிழக அரசின் மந்த நிலையை பயன்படுத்தி தான் கர்நாடக அரசு அணையை கட்டியதா?என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு,”எங்களிடம் மந்தமும் இல்லை,மாந்தமும் இல்லை.”என்று தெரிவித்தார்.
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில்…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இந்த…
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…
அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…
இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…