5000 விவசாய மின் இணைப்புகளை மாற்றியமைக்க ஒப்புதல், தமிழ்நாடு அரசு அரசாணை!

solar power

சூரிய சக்தியில் இயங்கும் வகையில் 5,000 விவசாய மின் இணைப்புகளை மாற்றியமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் 5,000 விவசாய மின் இணைப்புகளை, சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரத்தை விவசாயிகள் அரசுக்கு விற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாற்றி அமைக்கப்படுகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள் தலா 30% நிதியும், எஞ்சிய 40% நிதி மின்வாரியம் உதவியுடன் வங்கி கடன் பெற்று விவசாயிக்கு தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறியளவில் அமைக்கப்படும் சூரிய மின்சக்தி நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் பாசன பணிக்கு பயன்படுத்தப்படும். மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியம் விலைக்கு பெற்று கொள்ளும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்