உலககோப்பைக்கு முன்பு கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் – கபில் தேவ்!

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியை விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) பிசிசிஐ சமீபத்தில் இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருந்தது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களை உள்ளடக்கிய அந்த வீரர்கள் குழுவில் கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற நீண்ட மாதங்களாக விளையாடாமல் இருந்த வீரர்கள் அணிக்கு திரும்பினார்கள்.
கே.எல். ராகுல் மற்றும் ஐயர் திரும்பி உள்ளது , இந்தியாவின் மிடில் ஆர்டர்க்கு பக்க பலமாக இருக்கும் என்பதற்க்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காயம் காரணமாக இருவரும் சில மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில், இருவரும் NCA (நேஷனல் கிரிக்கெட் அகாடமி)யில் ஒரு பயிற்சி ஆட்டத்தில் கலது கொண்டனர்.
ஆனால், இருவரும் ஒரு 50 ஓவர் போட்டியில் கூட விளையாடி தங்களுடைய பார்மை வெளிக்காட்ட வில்லை அதற்குள் எதற்காக இருவரையும் தேர்வு செய்தீர்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், ஆசிய கோப்பை அணியில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டதை பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வீரரும் சோதிக்கப்பட வேண்டும்
உலகக் கோப்பை மிகவும் நெருக்கமாக உள்ளது, எனவே அணியில் விளையாடும் வீரர்கள் எல்லாம் சரியான உடற்தகுதியோடு இருக்கிறார்களா? என்பதனை சோதிக்கப்பட வேண்டும். ஆனால் நீங்கள் இன்னும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லையா? அவர்கள் உலகக் கோப்பைக்குச் சென்று காயம் அடைந்தால் என்ன செய்வது? ஒட்டுமொத்த அணியும் பாதிக்கப்படும்.
வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
மோசமான சூழ்நிலையில், உலகக் கோப்பையின் போது நம்மளுடைய அணி வீரர்களுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டால், அவர்கள் அணியில் இடம்பெறாமல் போய்விடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிவிடும். எனவே, என்னைப்பொறுத்தவரை உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக காயம் அடைந்த கே.எல்.ராகுலுக்கு ஷ்ரேயாஸ் ஐயருக்கும் ஆகிய வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதில் அவர்கள் சரியாக விளையாடி தங்களுடைய பார்மை நிரூபித்தால் உலகக் கோப்பையில் விளையாடலாம்.
திறமைக்கு எல்லாம் நம்மளுடைய அணியில் பஞ்சமில்லை, என்னை பொறுத்தவரை நான் சொல்வது இதை தான் சொல்வேன். ஆனால் அவர்கள் உடல்தகுதி சரியாக இல்லாவிட்டால், உலகக் கோப்பை அணியில் இந்தியா உடனடியாக மாற்றங்களைச் செய்துவிடும். எனவே அதனை கருத்தில் கொண்டு வீரர்கள் அனைவரும் செயல்பட வேண்டும்” எனவும் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.