சென்னை தலைமை செயலகத்தில், காலை 11 மணியளவில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த ஜூன் 21-ஆம் தேதி, தமிழகத்தில் திமுக தலைமையிலான 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கப்பட்டது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், ஜூன் 24-ம் தேதியுடன் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில், காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதையடுத்து, இது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது தொடர்பாகவும், தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதியமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…