இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியா மட்டுமின்றி உலகிற்கே பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இந்த கொடிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,547 பேரிலிருந்து 2,902 பேராக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த கொடிய கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக அத்தியவசிய பொருள்கள் மட்டும் கிடைக்கும் வகையில் அந்த கடைகளை மட்டும் திறக்க அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் சமுக வலைதளங்களில் சலூன் கடைகள் திறக்க காலை 7மணி முதல் 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த செய்தி குறித்து தமிழக சீர்மிகு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், சமுக வலைதளங்களில் வரும் தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா நிவாரண நிதியுதவி அளியுங்கள் என யாராவது உங்களை தொலைபேசி வாயிலாக அழைத்தால் அவர்களை நம்ப வேண்டாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…